இலங்கைக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய பந்துவீச்சாளர் ரவி பிஷ்னோய் காயம் அடைந்தார். இலங்கை வீரர் கமிந்து மெண்டிஸ் 16வது ஓவரின் முதல் பந்தில் ஆட்டமிழந்தார். பிஷ்னோய் ஒரு ரிட்டர்ன் கேட்ச்சை எடுக்க முயற்சித்தார். அப்போது பந்து கண்ணுக்கு அடியில் பலமாக தாக்கியது. இதனால் அவர் முகத்தில் சிறு காயம் ஏற்பட்டு ரத்தம் வெளியேறியது. அதன்பின், கட்டு போட்டு விளையாடுவதை தொடர்ந்தார். இதனால் சக வீரர்கள் அவரை பாராட்டினர்.