கொளுத்தும் வெளியிலில் நாதக வேட்பாளர் அனல் பறக்க பேச்சு

54பார்த்தது
மக்களவை தேர்தலில் மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மருத்துவர் கார்த்திகேயனுக்கு ஆதரவாக இன்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்கு சேகரித்தார். சென்னை சிந்தாதரிப்பேட்டை பகுதியில் திறந்த வாகனத்தில் கொளுத்தும் வெயிலில் நின்று கொண்டு பேசிய வேட்பாளர் கார்த்திகேயன், திமுகவும், பாஜகவும் கள்ளக்கூட்டணி வைத்துள்ளார்கள். 5 இடங்களில் பாஜக வெற்றி பெற்று வரட்டும் என திமுக விரும்புகிறது. பாஜக தமிழ்நாட்டில் வளர்வதில் திமுகவுக்கு என்ன அவசியம்?, இரண்டு கொள்ளைக் காரர்களும் சேர்ந்து கொண்டு காவல்துறை போல குற்றங்களை ஒடுக்க வரும் நாம் தமிழர் கட்சியை கண்டு பதறுகின்றன.

எல்லோரும் சேர்ந்து எங்கள் சின்னத்தை (விவசாயி சின்னம்) பறித்தார்கள். ஆனால் கடவுள் இருக்கிறார். எங்கள் சின்னம் (மைக்) இல்லாமல் இப்போது யாரும் ஓட்டு கேட்க முடியாது என்றார்.

தொடர்புடைய செய்தி