தமிழ்நாட்டில் 6 இடங்களில் சதமடித்த வெயில்

76பார்த்தது
தமிழ்நாட்டில் 6 இடங்களில் சதமடித்த வெயில்
தமிழ்நாட்டில் இன்று (செப்டம்பர் 2) வெயில் மக்களை பெரிதும் வாட்டி வதைத்தது. அதன்படி 6 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தியது. இதில் அதிகபட்சமாக மதுரை விமான நிலையம், தஞ்சை, மதுரை நகரத்தில் தலா 102 ஃபாரன்ஹீட் வெயில் வெளுத்து வாங்கியது. அதே போல நாகை, திருச்சி 101, தூத்துக்குடி 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி