ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு

124322பார்த்தது
ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு
தமிழகத்தில் தற்போது சுமார் 2 கோடிக்கும் அதிகமான ரேஷன் கார்டுகள் உள்ள நிலையில், சுமார் 35,233க்கும் அதிகமான நியாயவிலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த ரேஷன் கடைகளுக்கு அரசு விடுமுறை மற்றும் வெள்ளிக்கிழமையில் மட்டும் விடுமுறை விடப்படும். இந்த நிலையில், ரேஷன் கடைகள் வருகிற 12ஆம் தேதி (நாளை மறுநாள்) வெள்ளிக்கிழமை இயங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பொங்கல் பண்டிகையினை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பரிசுத் தொகுப்பு வழங்க ஏதுவாக, 12.01.2024 (வெள்ளிக் கிழமை) அன்று அனைத்து நியாய விலைக் கடைகளுக்கும் பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி