சென்னை மாநகராட்சிக்கான முக்கிய அறிவிப்புகள்!

68பார்த்தது
சென்னை மாநகராட்சிக்கான முக்கிய அறிவிப்புகள்!
வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை மானிய கோரிக்கையில் சென்னை மாநகராட்சிக்கு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. மெரினா கலங்கரை விளக்கம் முதல் தீவுத்திடல் வரை உள்ள மெரினா பாரம்பரிய வழித்தடம் ரூ. 10 கோடி செலவில் மேம்படுத்தப்படும். சென்னையின் முக்கிய போக்குவரத்து சிக்னல்களில் ரூ. 5 கோடி செலவில் சூரிய சக்தியில் இயங்கும் வகையில் மேம்படுத்தப்படும். சென்னையில் ரூ.40 கோடி மதிப்பீட்டில் கைவண்ணம் சதுக்கம் அமைக்கப்படும். கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகம் ரூ.‌10 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும். கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தில் ரூ. 15 கோடி மதிப்பீட்டில் மழை நீர் வடிகால் அமைக்கப்படும். மேலும் கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தில் ரூ. 7 கோடி செலவில் குளிர்சாதன சேமிப்பு கிடங்கு அமைக்கப்படும். சென்னையில் ரூ.30 கோடி செலவில் 3 பன்னோக்கு மையங்கள் அமைக்கப்படும். சென்னையில் அமைந்துள்ள 10 சுரங்க பாதைகள் ரூ‌.‌8 கோடி செலவில் மேம்படுத்தப்படும்.‌ தியாகராய நகர் பேருந்து நிலையம் ரூ.10 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும். போரூர் மற்றும் பெருங்குடி ஏரிகள் தலா ரூ. 10 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.

தொடர்புடைய செய்தி