ஜெகன் உடல் நலம் பெற வேண்டுகிறேன் - பிரதமர் மோடி

73பார்த்தது
ஜெகன் உடல் நலம் பெற வேண்டுகிறேன் - பிரதமர் மோடி
மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி மீது நடந்த கல்வீச்சு சம்பவத்துக்கு பிரதமர் மோடி கருத்து பதிவிட்டுள்ளார். இது குறித்தான தனது எக்ஸ் பக்கத்தில், அவர் விரைவில் உடல் குணமடையவும், ஆரோக்கியம் பெறவும் வேண்டுகிறேன் என தெரிவித்துள்ளார். இதில், கவனிக்கத்தக்க விஷயமாக பார்க்கப்படுவது, இந்தத் தாக்குதல் சம்பவத்துக்கு பிரதமர் கண்டனம் தெரிவிக்காமல் உடல் நலம் பெற வேண்டும் என மட்டும் பதிவில் குறிப்பிட்டுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி