அனிருத்துக்கும் நான் ரசிகன் ஆவேன் - கமல்ஹாசன்

83பார்த்தது
அனிருத்துக்கும் நான் ரசிகன் ஆவேன் - கமல்ஹாசன்
ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘இந்தியன் 2’ படத்தின் புரமோஷன் நிகழ்வுக்காக நடிகர் கமல்ஹாசன் மலேசியா சென்றுள்ளார். அங்கு நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் கமல் கலந்துகொண்டார். அப்போது நான் இளையராஜாவின் ரசிகன். ஏ.ஆர்.ரஹ்மானின் ரசிகன். இப்போது தான் வந்திருக்கிறார் அனிருத். அவருடைய பாடலைக் கேட்க கேட்க அவருக்கும் ரசிகன் ஆவேன் என்று நான் நம்புகிறேன். ஏனென்றால் நான் 40 வருடமாக இளையராஜாவை கேட்டுக் கொண்டிருக்கிறேன். 30 வருடமாக ரஹ்மானின் இசையை கேட்டுக்கொண்டிருக்கிறேன். அந்த இசையை புரிந்துகொள்ளவே எனக்கு பல ஆண்டுகள் தேவைப்பட்டது” என்றார்.

தொடர்புடைய செய்தி