மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக பாஜகவினர் வற்புறுத்திக் கேட்டதால் கையெழுத்திட்டேன். பாஜகவினர் அழுத்தம் கொடுத்து கையெழுத்திடச் சொன்னதால் கையெழுத்திட்டேன் என அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்எல்ஏ விஜயகுமார் கூறியுள்ளார். மேலும் பொதுச்செயலாளரை சந்தித்து என் தரப்பு விளக்கத்தை அளிப்பேன் எனவும் தெரிவித்துள்ளார். பாஜகவினரின் மும்மொழி கொள்கை கையெழுத்தி இயக்கத்தில் கையெழுத்து போட்டதால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.