பாரீஸ் ஒலிம்பிக்கில் மகளிர் குத்துசண்டை 66 கிலோ எடை பிரிவில் அல்ஜீரியாவின் இமானே கெலிப் "பெண் இல்லை ஆண்" என காலிறுதியில் அவருடன் மோதிய இத்தாலியின் கரினி, குற்றம்சாட்டினார். இந்நிலையில், அரையிறுதியில் தாய்லாந்து வீராங்கனையையும், பைனலில் சீனாவின் யாங்லியூவை வீழ்த்தி இமானே கெலிப் தங்கம் வென்றார். வெற்றிக்கு பின் அவர், "மற்றவர்களை போல் நான் ஒரு பெண்தான். நான் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானேன், இது அவர்களுக்கு(தங்கம் வென்றது) மிகப்பெரிய பதில்" என்று கூறியுள்ளார்..