அரசுப் பள்ளிகளை தனியாருக்கு தாரைவார்க்கவில்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். "அரசு பள்ளிகளை தனியாருக்கு தத்துக்கொடுப்பதாக நான் சொல்லவில்லை. தனியார் பள்ளிகள் சங்க நிகழ்ச்சியில் நான் என்ன பேசினேன் என்பதை தெரிந்துகொள்ளாமலேயே, கண்டன அறிக்கை வருகிறது. உறுதிப்படுத்தாமல் கண்டனம் தெரிவித்தவர்களுக்கு, பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் சார்பாக கண்டனங்கள்” என்றார்.