எனக்கு 80 உனக்கு 34.. நீதிமன்றத்தில் நடந்த திருமணம்

79523பார்த்தது
எனக்கு 80 உனக்கு 34.. நீதிமன்றத்தில் நடந்த திருமணம்
மத்திய பிரதேசத்தின் அகர் மால்வா மாவட்டத்தில் சமீபத்தில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்துள்ளது. மகாரியா கிராமத்தைச் சேர்ந்த பலுராம் பக்ரி (80) மற்றும் அமராவதியைச் சேர்ந்த ஷீலா இங்கிள் (34) ஆகியோர் சமூக வலைதளத்தின் மூலம் பழகி வந்துள்ளனர். சில நாட்களில் அது காதலாக மாறியது. இருவரது வயது வித்தியாசம் அதிகளவில் இருந்தாலும், அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தனர். இதனையடுத்து இருவரும் வழக்கறிஞர் மூலம் நீதிமன்றத்தை அணுகினர். இருவரும் தங்களது நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் கோர்ட் வளாகத்தில் உள்ள அனுமன் கோயிலில் திருமணம் செய்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி