தமிழ்நாட்டில் வட மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் நாளை (நவ.12) முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளது என தனியார் வானிலை ஆர்வலர் ப்ரதீப் ஜான் தகவல் அளித்துள்ளார். குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, விழுப்புரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்புத்தூர், கிருஷ்ணகிரி, பெரம்பலூர், திருச்சி, சேலம், கடலூர், கள்ளக்குறிச்சி மற்றும் புதுச்சேரியில் நாளை முதல் கனமழை பெய்யக் கூடும் என தெரிவித்துள்ளார்.