உலகிலேயே மிகவும் அடர்த்தியான மக்கள் தொகை இருக்கும் பகுதி தமிழகம் தான். ஒரு சதுர கி.மீக்கு 600 பேர் வசிப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. 2011-ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தென் பகுதியில் ஒரு சதுர கி.மீக்கு 457 பேரும், மத்திய தமிழகத்தில் ஒரு சதுர கி.மீ 551 பேரும், கொங்கு மண்டலத்தில் ஒரு சதுர கி.மீக்கு 473 பேரும், வட தமிழகத்தில் ஒரு சதுர கி.மீக்கு 786 பேரும் வசிப்பதாக கூறப்படுகிறது. இது தேசிய சராசரியை விட 33% அதிகமாகும்.