வயநாடு நிலச்சரிவு விபத்தில் சிக்கியுள்ள கேரள அரசிடம் ரூ.5 கோடி நிதி வழங்கப்பட இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன் பேரில், தற்போது திருவனந்தபுரத்தில் உள்ள தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் பினராயி விஜயனிடம் ரூ.5 கோடி நிவாரண நிதிக்கான காசோலையை அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார். வயநாடு நிலச்சரிவில் சிக்கி இதுவரை 185க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து மீட்பு பணியானது தீவிரமாக நடைபெற்று வருகிறது.