தாயின் 3வது கணவனை குத்திக்கொன்ற மகன்

17154பார்த்தது
தாயின் 3வது கணவனை குத்திக்கொன்ற மகன்
திருச்சி பாலக்கரையை சேர்ந்தவர் பரணி (28). சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் மீது கோட்டை காவல் நிலையம், காந்தி மார்க்கெட் காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவர் ஜோதி (45) என்ற பெண்ணுக்கு 3வது கணவராக உள்ளார். வழக்கொன்றில் சிக்கி சிறையில் இருந்த பரணி கடந்த மார்ச் மாதம் சிறையில் இருந்து திரும்பியுள்ளார். பரணிக்கும் ஜோதிக்கும் அடிக்கடி தகராறு நடந்து வந்துள்ளது. இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு, பரணி ஜோதியை அடித்துள்ளார்.

அதனைக் கண்ட ஜோதியின் மகன் மாதேஷ் மற்றும் அவரது நண்பன் முகமது தெளபீக் ஆகிய இருவரும் சேர்ந்து கத்தியால் குத்தியதில் பரணி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். கொலை செய்து தப்பியோடிய இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.