"ஆளுனர் வெளிநடப்பை நியாயப்படுத்த முடியாது"

67பார்த்தது
"ஆளுனர் வெளிநடப்பை நியாயப்படுத்த முடியாது"
உரைக்கு முன் தேசிய கீதம் இசைப்பது தமிழக மரபல்ல என்று ஆளுனர் அலுவலகத்திற்கு தமிழக சட்டப்பேரவைச் செயலகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது. அதன் பிறகும் அவையில் உரையை வாசிக்காததும் வெளிநடப்பு செய்ததும் நியாயப்படுத்த முடியாதவை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். மேலும் அரசுக்கும் ஆளுனருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்துக் கொண்டே செல்வது நல்லதல்ல. ஆளுனரும், அரசும் இணைந்து செயல்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். இன்று தொடங்கிய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இருந்து ஆளுநர் பாதியில் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி