ரூ.50 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை

75பார்த்தது
ரூ.50 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை
ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மார்ச் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.49,640க்கும், கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.6,205க்கும் விற்பனையாகிறது. அதேபோல், ஒருகிராம் வெள்ளியின் விலை 30 காசுகள் அதிகரித்து ரூ.80.80க்கும், கிலோ வெள்ளி ரூ.300 அதிகரித்து ரூ.80,800க்கும் விற்பனையாகிறது.

தொடர்புடைய செய்தி