நெல்லை, மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு

77பார்த்தது
நெல்லை, மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு
நெல்லை, மயிலாடுதுறை மக்களவை தொகுதிகள் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் இன்று மாலைக்குள் அறிவிக்கப்படவுள்ளதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். சென்னை சத்தியமூர்த்திபவனில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 9 தொகுதிகளில் எஞ்சிய திருநெல்வேலி, மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி மற்றும் விளவங்கோடு இடைத்தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் இன்று மாலைக்குள் அறிவிக்கப்படுவார்கள் என்றார்.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழகம், புதுச்சேரியில் 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே தமிழகத்தில் 7 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி