பசுபிக் கடலில் அமைந்துள்ள ரோடா தீவுகளில் மட்டுமே வளரக்கூடிய மரம் சீரியாந்தஸ் நெல்சோனி. இந்த வகை மரங்கள் தற்போது அழிந்து வருகிறது. இதை செயற்கை ஒளியில் வளர்க்கும் பொழுது நன்றாக வளர்கிறது. ஆனால் காடுகளில் நட்டால் சூரிய ஒளி கிடைக்காமல் பட்டுப் போகிறது. இதற்கு விஞ்ஞானிகள் மரத்தைச் சுற்றி அறுகோண வடிவில் கண்ணாடியை பதித்தனர். இதன் மீது படும் சூரிய ஒளி போதுமான வெளிச்சத்தை தந்து, மற்ற கண்ணாடி பதிக்காத செடிகளைக் காட்டிலும் 175% உயரமாக வளர உதவியது.