பேருந்து கவிழ்ந்ததில் சிறுமி பலி, 25 பேர் காயம் (வீடியோ)

61பார்த்தது
ராஜஸ்தான் மாநிலம் தௌசாவில் இன்று (மே 29) அதிகாலையில் பயங்கர சாலை விபத்து நடந்தது. ஹரித்வாரில் இருந்து ஜெய்ப்பூர் நோக்கி சென்ற பேருந்து கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் சிறுமி ஒருவர் உயிரிழந்ததாகவும், 25க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுமியின் உடலை மீட்டு, காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி