விஜயகாந்த் அலுவலகத்தை வட்டமடித்த கருடன் (வீடியோ)

103043பார்த்தது
மறைந்த கேப்டன் விஜயகாந்தின் திருவுருவப்பட திறப்பு விழா இன்று அவரது கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கட்சி நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின்போது தேமுதிக கட்சி அலுவலகத்தின் மேல் கருடன் ஒன்று நீண்ட நேரமாக வட்டமடித்து. இதனை கண்ட தொண்டர்கள் உற்சாகமடைந்தனர். இதற்கு முன்னர் விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்திலும், பிரேமலதா அன்னதானம் வழங்கும்போதும் கருடன் வானத்தில் வட்டமடித்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி