மதுரை முத்துப்பட்டி கள்ளர் பள்ளியில் 7ம் வகுப்பு மாணவன் விஷ்ணுக்கு வாக்கு கொடுத்தபடி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சைக்கிள் பரிசளித்துள்ளார். கடந்தாண்டு காலை உணவு திட்டத்தை தொடங்கி வைக்க சென்ற அமைச்சரிடம் விஷ்வா சைக்கிள் கேட்டுள்ளார். அப்போது மாணவனின் உடல் எடை 23 கிலோ இருந்ததால் சைக்கிள் ஓட்ட பலம் வேண்டும் 30 கிலோ எடை வந்தவுடன் சைக்கிள் வாங்கித் தருவதாக கூறியுள்ளார். அதன்படி தற்போது அந்த மாணவனுக்கு புதிய சைக்கிளை பரிசளித்துள்ளார்.