காங்கிரஸ் கணக்குகள் முடக்கம்: கார்கே கண்டனம்

71பார்த்தது
காங்கிரஸ் கணக்குகள் முடக்கம்: கார்கே கண்டனம்
காங்கிரஸ் கணக்குகள் முடக்கப்பட்டதற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார். நிதியில்லாமல் தவித்து வருகிறோம். 'மக்களின் நன்கொடை டெபாசிட் செய்யப்பட்ட கணக்குகளை பாஜக அரசு முடக்கி வைத்துள்ளது என்றார். எங்கள் கட்சிக்கு ஐடி துறை கடும் அபராதம் விதித்துள்ளது. மறுபுறம், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறி தேர்தல் பத்திரங்கள் மூலம் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் வழங்கியது யார் என்ற விவரத்தை பாஜக சொல்ல முடியாமல் திணறுகிறது. ஏனெனில், சொன்னால் பிரச்னை வெளியே வரும்' என, விமர்சித்தார்.

தொடர்புடைய செய்தி