நீலகிரி முன்னாள் பாஜக எம்.பி காலமானார்

55பார்த்தது
நீலகிரி முன்னாள் பாஜக எம்.பி காலமானார்
நீலகிரி மக்களவைத் தொகுதியின் முன்னாள் பாஜக எம்.பி மாஸ்டர் மாதன் (93) காலமானார். கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பிரஸ் காலனி பாலாஜி கார்டனில் மாஸ்டர் மாதன் வசித்து வந்த நிலையில், நேற்று இரவு 11.10 மணிக்கு அவரது இல்லத்தில் இயற்கை எய்தினார். மாஸ்டர் மாதன் நீலகிரி மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் 1998 மற்றும் 1999-ம் ஆண்டுகளில் போட்டியிட்டு வெற்றி பெற்று 2 முறை எம்பியாக பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி