முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. அப்போது பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “தற்போதைய கணக்கெடுப்புப்படி தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால் தொகுதிகளை இழக்கும் நிலை ஏற்படும். குறிப்பாக தென் இந்தியாவின் இடங்கள் 30% என்பதலிருந்து 20% என குறையும் அபாயம் உள்ளது. மக்களவை தொகுதிகள் அதிகரிக்கப்பட்டால் நமக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும் என்பதை உறுதிசெய்ய வேண்டும்” என்றார்.