விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்

76பார்த்தது
விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று (ஜுன் 14) தொடங்குகிறது. இந்த தொகுதியின் திமுக எம்எல்ஏவாக இருந்த நா.புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் உடல்நலக்குறைவால் காலமானார். இந்த நிலையில், வருகிற ஜுலை 10ஆம் தேதி இடைத்தேர்லுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதனையொட்டி வேட்புமனு தாக்கல் இன்று (ஜூன் 14) தொடங்கி 21ஆம் தேதி வரை நடைபெறும். இந்த தொகுதியில் திமுக சார்பில் மாநில விவசாய அணி செயலாளர் அன்னியூர் சிவா போட்டியிடுகிறார். அதிமுக, பாமக, நாதக வேட்பாளர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

தொடர்புடைய செய்தி