பத்ரகாளியம்மன் கோவில் திருவிழாவிற்காக முகூர்த்தக்கால்

60பார்த்தது
பத்ரகாளியம்மன் கோவில் திருவிழாவிற்காக முகூர்த்தக்கால்
திண்டுக்கல் நத்தம் காமராஜர் நகர் பத்ரகாளியம்மன் கோவில் திருவிழா 1999ஆம் ஆண்டில் 15 நாள் திருவிழாவாக நடத்தப்பட்டது. அதன் பின்னர் திருவிழா நடத்தப்படவில்லை. இந்நிலையில் 24 ஆண்டுகளுக்கு பிறகு திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டு வருகிற 18ஆம் தேதி அழகர்மலை தீர்த்தம் அழைத்து வரப்பட்டு காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது. இதையொட்டி முகூர்த்தக்கால் நடும் விழா நேற்று (ஜூன் 13) நடைபெற்றது. பத்ரகாளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் நடந்தது. 21ஆம் தேதி பால்குடம் எடுத்தல் நிகழ்ச்சியும், 25ஆம் தேதி அம்மன் நகர்வலம் வரும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கிடாய் வெட்டி ரத்தம் குடிக்கும் நிகழ்வு வருகிற ஜூலை 2ஆம் தேதி இரவும், மறுநாள் அன்னதானமும் நடைபெற உள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி