பெண் காவலர் குறித்து அவதூறு செய்தியை ஒளிபரப்பிய புகாரின் பேரில் சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த ரெட்பிக்ஸ் யூட்டியூப் சேனலின் ஆசிரியர் பெலிக்ஸ் ஜெரால்டை கடந்த மாதம் 10 ஆம் தேதி கைது செய்தனர். இந்நிலையில் பெலிக்ஸ் ஜெரால்டுக்கு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கிய நிலையில், இன்று காலை 9:30 மணி அளவில் அவர், வெளியே வந்தார். மேலும், அவர் வார நாட்களில் செவ்வாய்க்கிழமை தோறும் காலை 10:30 மணிக்குக் கோயம்புத்தூர் டவுன் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.