கள்ளச்சாராய சாவுகள் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது - பீட்டர் அல்போன்ஸ்

69பார்த்தது
கள்ளச்சாராய சாவுகள் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது - பீட்டர் அல்போன்ஸ்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், விஷ சாராயம் அருந்தியதால் ஏற்பட்ட மரணங்கள் குறித்து விசாரணை செய்ய அமைக்கப்பட்டுள்ள நீதியரசர் கோகுல்தாஸ் கமிஷனை வரவேற்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில், இந்த சாவுகள் ஏற்பட்ட நேரம் பல சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. பாராளுமன்ற தேர்தலில் நாற்பது இடங்களிலும் வெற்றி பெற்று, வெற்றி நாயகராக சட்டமன்றத்திற்கு வந்து பெருமிதத்தோடு பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் அறிவிக்க தயாராக இருந்த வேளையில் அரசின் நல்ல பெயருக்கு குந்தகம் விளைவிக்கும் இந்த மரணங்களுக்கு பின்னால் அரசியல் சதி ஏதும் உள்ளதா என்ற கோணத்திலும் கமிஷன் விசாரிக்க வேண்டும். கள்ள சாராயத்தை விற்பவர்கள் மரணத்தினை ஏற்படுத்தும் விஷத்தை கலக்க மாட்டார்கள் என்று சிலர் தெரிவிக்கின்ற கருத்துக்களையும் பரிசீலிக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி