சீரடி சாய்பாபா கோவிலில் வருடாபிஷேக விழா

71பார்த்தது
சீரடி சாய்பாபா கோவிலில் வருடாபிஷேக விழா
மதுரை மாவட்டம் திருவேடகம் அருகே, வைகை நதிக்கரையோரம் அமைந்துள்ள சீரடி சாயிபாபா கோவிலில், 15ஆம் ஆண்டு வருடாபிஷேக விழா நடைபெற்றது. 4ஆம் தேதி காலை 10 மணிக்கு மேல் இரண்டாவது கால யாக பூஜை நடைபெற்றது. தொடர்ந்து 12 மணி அளவில் கடம் புறப்பாடாகி 15ஆம் ஆண்டு வருடா பிஷேக விழா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, சாய்பாபாவுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. தீபாராதனை காட்டப்பட்டது. கோவில் மண்டபத்தில், பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி