விண்வெளி மையத்திற்கு சுனிதா வில்லியம்ஸ் பயணம்

74பார்த்தது
சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கான பயணம் மூன்று முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தற்போது அட்லஸ் வி ராக்கெட்டில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் பயணம் செய்துள்ளார். அட்லஸ் வி ராக்கெட்டில் இருந்து விண்வெளி வீரர்கள் அமர்ந்துள்ள ஸ்டார் லைனர் விண்கலம் தனியாக பிரிந்துள்ளது.

ஏற்கனவே கடந்த 2006 மற்றும் 2012ஆம் ஆண்டுகளில் சுனிதா வில்லியம்ஸ், இரண்டு முறை விண்வெளிக்கு சென்றிருக்கிறார். விண்வெளியில் மொத்தமாக 322 நாள்கள் தங்கியுள்ளார். தற்போது மூன்றாவது முறையாக இன்று இந்திய நேரப்படி 8.30 மணி அளவில் விண்வெளி பயணம் தொடங்கியது. சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அமெரிக்க கடற்படை கேப்டன் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் அமெரிக்காவில் உள்ள கென்னடி விண்வெளி ஏவுதளத்தில் இருந்து புறப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி