டி20 உலக கோப்பை தொடர்: வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி!

1080பார்த்தது
டி20 உலக கோப்பை தொடரை இந்திய அணி வெற்றியுடன் தொடங்கியுள்ளது. டி20 உலகக்கோப்பை 2024ல் இந்தியா ஆடும் முதல் போட்டியில் அயர்லாந்து அணியை நேற்று (ஜுன் 5) எதிர்கொண்டது. நியூயார்க்கில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதல் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி, இந்திய வீரர்களின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தொடர்ந்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இந்நிலையில், அயர்லாந்து அணி 16 ஓவர்களில் 95 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து 96 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிமையாக வெற்றி பெற்றது.

தொடர்புடைய செய்தி