ஜோ பைடனின் பேச்சால் நிர்வாகிகள் அதிருப்தி

84பார்த்தது
ஜோ பைடனின் பேச்சால் நிர்வாகிகள் அதிருப்தி
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான விவாதத்தில் தற்போதைய அதிபர் ஜோ பைடனின் பேச்சை கேட்டு, அவரது ஜனநாயக கட்சியைச் சேர்ந்தவர்களே அதிருப்தியில் இருப்பதாக விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், தேர்தலிலிருந்து பைடன் விலகி, வேறொரு வேட்பாளருக்கு வழி விடுவதே நல்லது என ஜனநாயக கட்சிக்குள் குரல்கள் வலுக்கத் தொடங்கியுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். குடியரசுக் கட்சி வேட்பாளரான முன்னாள் அதிபர் ட்ரம்ப் உடனான விவாதத்தில், தனது வயது முதிர்ச்சியால் பைடன் பல இடங்களில் திணறியது அப்பட்டமாக வெளிப்பட்டதாகவும் கூறுகின்றனர்.

தொடர்புடைய செய்தி