72 மணிநேரத்தில் பாலத்தை கட்டிய ராணுவ வீரர்கள் (வீடியோ)

68பார்த்தது
இந்திய ராணுவத்தின் திரிசக்தி கார்ப் நிறுவனம் சிக்கிமில் 70 அடி நீள பாலத்தை 72 மணி நேரத்தில் கட்டி முடித்துள்ளது. வெள்ளத்தால் சேதமடைந்த போக்குவரத்தை மறுசீரமைப்பதற்காக டிக்சு - சங்க்சாங் பாதையில் இந்த இரும்பு பாலம் கட்டப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சிக்கிமில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் பல இடங்களில் சாலை இணைப்பு சேதம் அடைந்துள்ளது. இந்த நிலையில் 72 மணி நேரத்தில் பாலத்தை கட்டி முடித்த ராணுவ வீரர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

தொடர்புடைய செய்தி