தவெக தலைவருக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வாழ்த்து!

80பார்த்தது
தவெக தலைவருக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வாழ்த்து!
மக்கள் படும் துயரங்களை கண்டு மற்றவர்களை போன்று தூரம் செல்லாமல் குரல் கொடுத்து நேரிலும் சென்று ஆறுதல் தெரிவித்த தம்பி விஜய்க்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், ஆளும் அரசின் விழாக்களுக்கு செல்வது மட்டும் திரைத்துறையின் பணியல்ல! மக்கள் பிரச்சினைகளில் அரசியல்வாதிகளின் குரலை அரசியல் என்று‌ விடுவார்கள். திரைத்துறையினரும் குரல் கொடுத்தால் அரசால் திசை திருப்ப இயலாது. கள்ளக்குறிச்சி விவகாரம் அரசியல் அல்ல. பாமர மக்கள் மீதான அதிகார‌ தாக்குதல்! எல்லாம் கொடுத்த மக்களுக்காக ஏன்‌ குரல் கொடுக்க கூடாது என்பதே எல்லோரின் கேள்வியாகும். விஜய் திரைப்பணியோடு நின்று விடாமல் மக்கள் பணியிலும் ஈடுபடவுள்ளது வரவேற்கத்தக்கது என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி