ஈரோடு மாவட்டம், பு. புளியம்பட்டி அருகே உள்ள புங்கம்பள்ளி, நல்லூர், பனையம்பாளி, நொச்சிக்குட்டை மற்றும் அதை சுற்றி உள்ள குளங்கள் தண்ணீர் இல்லாமல் வறண்டு போய் கிடக்கின்றன. இந்த குளங்களுக்கு அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தின் மூலம் தண்ணீர் நீரப்பினால் அப்பகுதியில் உள்ள சுமார் 20, 000 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன் பெரும் இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைவர்கள். ஆனால் இந்த குளங்களுக்கு பைன் லைன் அமைக்கப்பட்டு இருந்தும் இதுவரை இந்த குளங்களுக்கு முறையாக தண்ணீர் விடாததால் இப்பகுதி விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாமல் மழையை நம்பியே உள்ளனர். தற்போது அத்திக்கடவு - அவினாசி திட்டம் மூலம் மற்ற குளங்கள் நிரப்பப்பட்டு வரும் நிலையில்
அத்திக்கடவு- அவினாசி திட்டத்தில் உள்ள குளம், குட்டைகளுக்கு தண்ணீர் இதுவரை விடப்படவில்லை. இந்த குளங்களுக்கு உடனடியாக தண்ணீர் விட கோரி தேசிபாளையம் பிரிவு அருகே தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தை விவசாயிகள் 100 க்கும் மேற்பட்டோர். தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குளங்களுக்கு தண்ணீர் வரும் வரை போராட்டம் தொடரும் என விவசாயிகள் அறிவித்துள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போராட்டத்தை முன்னிட்டு ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.