ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்தவர் அங்குராஜ்(29). கூலித் தொழிலாளியான இவருக்கு பிரியா(28) என்ற மனைவி உள்ளார். இவர்கள் இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் பொறுமையிழந்த பிரியா கீழ்பவானி வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். இவருடைய உடல் நேற்று (நவம்பர் 19) கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.