சென்னிமலையில் 25 ஆம் தேதி பங்குனி உத்திர தேரோட்டம்

1553பார்த்தது
சென்னிமலையில் 25 ஆம் தேதி பங்குனி உத்திர தேரோட்டம்
சென்னிமலையில் உள்ள முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர நாளில் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி நாளை மறுநாள் 22-ம் தேதி காலை 6 மணிக்கு கணபதி ஹோமத்துடன் நிகழ்ச்சிகள் தொடங்குகிறது.
23-ம் தேதி காலை 10 மணிக்கு கொடியேற்றம் நடைபெறுகிறது. 24-ம் தேதி மாலை 6 மணிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது.
முக்கிய நிகழ்ச்சியான பங்குனி உத்திர தேரோட்டம் 25-ம் தேதி காலை 6 மணிக்கு மேல் நடைபெறுகிறது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து வடக்கு ராஜ வீதி சந்திப்பில் நிறுத்துகின்றனர்.
விழாவை முன்னிட்டு அன்று காலை 7 மணி முதல் அக்னி நட்சத்திர அன்னதான விழாக்குழு சார்பில் மலை அடிவாரத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
அன்று மாலை 5 மணிக்கு மீண்டும் தேர் வடம் பிடித்து இழுத்து நிலை சேர்க்கப்படுகிறது.
26-ம் தேதி காலை 9 மணிக்கு பரிவேட்டை நிகழ்ச்சியும், இரவு 7 மணிக்கு தெப்ப தேரோட்டமும் நடைபெறுகிறது. 27-ம் தேதி காலை 8 மணிக்கு மகா தரிசனம் நடைபெறுகிறது. அன்று மாலை 5 மணிக்கு மஞ்சள் நீர் உற்சவத்துடன் தேர் திருவிழா நிகழ்ச்சிகள் நிறைவு பெறுகிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் (சரிபார்ப்பு) தா. நந்தகுமார், சென்னிமலை கோவில் செயல் அலுவலர் சரவணன், பெருந்துறை கோவில் ஆய்வாளர் ஆதிரை மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி