ஊத்துக்குளி அருகே உள்ள அணைப்பாளையம் குளத்தை தூர்வார இப்பகுதி பொதுமக்கள் விவசாயிகள் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது நொய்யல் ஆற்றில் மழை நீர் பெருக்கெடுத்து வருவதன் காரணமாக அணைப்பாளையம் குளத்திற்கு செல்லும் நீர் வழிப்பாதை புதர்களால் சூழப்பட்டு குளத்திற்கு செல்லும் வழியை அடைத்துக் கொண்டுள்ளது. குளத்திற்கு செல்லும் நீர் வழிப் பாதையில் ஆகாயத்தாமரைகள், கரைப்புல் ஆகியவை புதர் மண்டி கிடக்கின்றது. ஆகாயத்தாமரைகளை சீரமைப்பு செய்வதன் மூலம் மழைநீர் குளத்திற்கு தங்குதடை இன்றி செல்லும் , இதனால் கிணறுகள் மற்றும் ஆழ்குழாய் கிணறுகளில் நீர்மட்டம் உயரும் வாய்ப்புள்ளது. அணைப்பாளையம் உட்பட சுற்றுப்பகுதி விவசாயிகளின் நலனை கருதி இப்பகுதி பொதுமக்கள் நீர்வழிப்பாதையை சீரமைத்துக் கொடுக்கும்படி கோரிக்கை விடுத்துள்ளனர்.