மே 5ல் 8 மையங்களில் நீட் தேர்வு நடத்த ஏற்பாடு

65பார்த்தது
மே 5ல் 8 மையங்களில் நீட் தேர்வு நடத்த ஏற்பாடு
மே 5ல் 8 மையங்களில் நீட் தேர்வு நடத்த ஏற்பாடு


இந்தியா முழுவதும் இளநிலை மருத்துவ படிப் பான பொது மருத்துவம்(எம். பி. பி. எஸ்) மற்றும் பல் மருத்துவம் (பி. டி. எஸ். , ] உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு நடப்பாண்டுக்கான நீட் தேர்வு, மே 5ல் நடக்கிறது. தேர்வு மையம், இடம், நகரம் குறித்த விவரங்களை தேசிய தேர்வுகள் முகமை வெளியிட்டுள்ளது.

இதை www. neet. nta. nic. in என்ற இணையத ளத்தில் தெரிந்து கொள்ளலாம். ஹால் டிக்கெட் விரைவில் வெளியிடப்படும் என தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது. இதற்காக ஈரோடு மாவட்டத்தில் எட்டு தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவற்றில், 4, 700 பேர் தேர்வெழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து நீட் தேர்வு கண்காணிப்பு அலு வலர் கூறியதாவது: மாவட்டத்தில் கடந்த ஆண்டை போலவே கோபியில் உள்ள தேர்வு மையம், திருப்பூர் மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 8 மையங்களிலும் தேர்வுக்கான முன்னேற்பாடு பணி நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்

தொடர்புடைய செய்தி