கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கெட்டிச்செவியூரை சேர்ந்த தேவராஜ் வயது (44) தொழிலாளி. சம்பவத்தன்று தேவராஜ் அவருடைய நண்பர்கள் சிவக்குமார் ரகுபதி அருண்குமார் தங்கவேல் ஆகியோர் கோபியை அடுத்த வேட்டைக்காரன் கோவில் அருகே உள்ள வாய்க்காலில் குளிக்க சென்றனர்.
சிவகுமாருக்கு நீச்சல் தெரியாததால் அவர் கரையில் இருந்த மற்ற நான்கு பேரும் வாய்க்காலில் இறங்கி குளித்தனர். அப்போது வாய்க்கால் தண்ணீரில் தேவராஜ் அடித்துச் செல்லப்பட்டார். இது குறித்து தகவல் கிடைத்ததும் தேவராஜனின் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாய்க்காலில் மூழ்கிய தேவராஜ் தேடினார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் கோபியை அடுத்த தாசம்புதூர் புது தோட்டம் அருகே உள்ள வாய்க்கால் கரையில் தேவராஜ் உடல் மிதந்ததை அவருடைய உறவினர்கள் கண்டனர். இது குறித்து தகவல் கிடைத்ததும் திங்களூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தேவராஜன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.