திருப்பூர்: கொடிவேரி அணை பவானி ஆற்றில் மூழ்கி பனியன் தொழிலாளி பலி

73பார்த்தது
திருப்பூர்: கொடிவேரி அணை பவானி ஆற்றில் மூழ்கி பனியன் தொழிலாளி பலி
திருப்பூர் மாவட்டம் அவினாசி தாலுகா வடுகுபாளையத்தை சேர்ந்த கோபால் என்பவர் மகன் அங்கப்பன் (36), பனியன் கம்பெனி தொழிலாளி. இவருக்கு ரம்யா (25) என்ற மனைவியும் கவிவிஷ்ணு (4 வயது) என்ற ஆண் குழந்தையும் கனிகாஸ்ரீ என்ற 6 மாத பெண் குழந்தையும் உள்ளனர்.
இந்நிலையில் இன்று (நவ.2) அங்கப்பன் தனது நண்பர்களுடன் கொடிவேரி அணைக்கு வந்துள்ளார். இன்று மாலை 4 மணி அளவில் பவானி ஆற்றில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்தவர் ஆழமான பகுதிக்கு சென்றுள்ளார். நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கியுள்ளார். நண்பர்கள் மற்றும் அருகில் இருந்தோர் தேடியுள்ளனர். அப்போது பவானி ஆற்றில் துவைத்துக் கொண்டிருந்த பெண்மணி ஒருவர் கொடுத்த தகவலின் பேரில் இறந்த நிலையில் கிடந்துள்ள அங்கப்பன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து பங்களாபுதூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி