திம்பம் மலைப்பாதையில் சிறுத்தைப்புலி - வீடியோ வைரல்

3694பார்த்தது
திம்பம் மலைப்பாதையில் சிறுத்தைப்புலி நடமாடியதை நேரில் பார்த்த வாகன ஓட்டி கள் அதிர்ச்சி அடைந்தனர்.

சத்தியமங்கலம் புலிகள்கள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு புலி, யானை, மான், கரடி, காட்டெருமை, சிறுத்தைப்புலி உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் காணப்படுகின்றன. இந்த வனப்பகுதி வழியாக சத்திய மங்கலம் -மைசூரு தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது அடர்ந்த வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இங்கு அவ்வப்போது இரவு நேரங்களில் சிறுத்தைப்புலி நடமாடுவது வழக்கம்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 19-வது கொண்டை ஊசி வளைவு அருகே சாலையில் சிறுத்தைப்புலி நடமாடியது. பின்னர் சாலையோர திம்பம் மலைப்பாதையில் நடமாடிய சிறுத்தைப்புலி தடுப்பு சுவரில் ஏறி வனப்ப குதிக்குள் சென்று மறைந்தது. இதனை அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் நேரில் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே வாகனங்களைச் சற்று தூரத்திலேயே நிறுத்திக் கொண்டனர்.

ஒரு சிலர் வாகனங்களில் இருந்தபடியே சிறுத்தைப்புலி யின் நடமாட்டத்தை தங்கள் செல்போன்களில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தனர். இதனை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். இது தற்போது வைரலாக பரவி வருகிறது. திம்பம் மலைப்பாதையில் சிறுத்தைப்புலி நடமாட்டத்தால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி