2025 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது ரேஷன் கார்டுதாரர்கள், அந்தியோதயா அன்ன யோஜனா திட்ட பயனாளிகள், முதியோர் உதவித்தொகை பெறுவோருக்கு இலவச வேட்டி, சேலை வழங்க அரசு உத்தரவிட்டது.
மொத்தம் 1 கோடியே 77 லட்சத்து 22 ஆயிரத்து 995 வேட்டிகள், 1 கோடியே 77 லட்சத்து 64 ஆயிரத்து 471 சேலை உற்பத்திக்கு உத்தரவிட்டு முதற்கட்டமாக 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்த 6 முதல் 20 ஆம் தேதிக்குள் 60 கிலோ எடை கொண்ட 20 ஆயிரம் பையில் வேட்டிகான 40ஸ் பாலிஸ்டர் காட்டன் நூல் மட்டும் வரத்தானது. சேலைக்கான நூல் வராததால் வேட்டி - சேலை உற்பத்தி இதுவரை தொடங்கவில்லை.