ஈரோடு மாவட்டம் வீரப்பன்சத்திரம் கம்பர் வீதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் வயது 47 கார்த்தி வயது 35 இருவரும் அம்மாபேட்டை பழைய மாரியம்மன் கோவில் வீதியில் தனித்தனியே தங்கி ஒரே மேஸ்திரியிடம் கட்டட வேலைக்கு சென்று வருகின்றனர் சில மாதங்களுக்கு முன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கார்த்திக் வேலைக்கு செல்லம் இருந்தார் இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு செந்தில்குமார் தனது வீட்டின் அமர்ந்து அதே பகுதியை சேர்ந்து ஒரு உடன் பேசிக் கொண்டிருந்தார் அப்போது குடுபோதையில் வந்த கார்த்தி நான் சொல்லும் மேஸ்திரியிடம் வேலைக்கு வர மாட்டாயா என்று தகாத வார்த்தையில் பேசியதுடன் ஏர்கன் துப்பாக்கில் செந்தில்குமார் சுட்டார் இதில் செந்தில்குமார் தொடையில் பலத்த காயம் ஏற்படுது இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் செந்தில்குமாரை ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் இது குறித்து செந்தில்குமார் அளித்த புகாரின் படி கார்த்தியை கைது செய்த அம்மாபேட்டை போலீசார் பவானி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர் மேலும் ஏர்கன் துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர்