ஈரோடு ஆனைக்கல் பாளையத்தில் உள்ள ஆயுதப்படையில் பணியாற்றுபவர் ஜனனி. இவர் நேற்று (நவம்பர் 11) தனது மொபட்டில் பெருந்துறை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது வாய்க்கால் மேடு அருகே சென்றபோது திடீரென நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து ஜனனி கீழே விழுந்தார். இதில் தலையில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது. இதனை அடுத்து அவரை சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரது தலையில் 7 தையல்கள் போடப்பட்டு தொடர்ந்து அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.