பள்ளி மாணவர்களுக்கு உபகரணங்கள் வழங்கல்

71பார்த்தது
பள்ளி மாணவர்களுக்கு உபகரணங்கள் வழங்கல்
பழங்குடி மக்கள் வாழும் கிராமம் சோழகனை பகுதியில் உள்ள உண்டு உறைவிட நடுநிலை பள்ளி குழந்தைகளுக்கு வரும் ஜூன் 10 பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் அனைவரும் பள்ளிக்கு வருகை தர வேண்டும், இடைநிற்றல் இன்றி அனைவருக்கும் கல்வி கிடைத்திட வேண்டும், எட்டாம் வகுப்பு வரை படித்து தேர்ச்சி அடைந்தவர்கள் அனைவரும் ஒன்பதாம் வகுப்பிற்கு பள்ளியில் சேர வேண்டும் என்கின்ற விழிப்புணர்வுடன் சோழகனை பள்ளி குழந்தைகளுக்கு உண்டான உபகரண பொருட்கள் வழங்கப்பட்டது. இதில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உதவி செய் அமைப்பு மூலம் இன்று சோழகனை பள்ளி குழந்தைகளுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் மேகவண்ணன் அவர்கள் தலைமையில் எழுது பொருட்கள், குறிப்பேடுகள், பெட்ஷீட், குடை, பிளேட், டம்ளர், வாட்டர் பாட்டில், விளையாட்டு உபகரண பொருட்கள் , வாலிபால், புட்பால், டென்னிஸ், பள்ளி பெண் குழந்தைகளுக்கு உண்டான நாப்கின் இதுபோன்ற பொருட்கள் பள்ளி குழந்தைகளுக்காக வழங்கப்பட்டது.
கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி அனைவரும் கல்வி பயில வேண்டும் என்று கிராம மக்கள் மற்றும் பள்ளி குழந்தைகள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மரம் மக்கள் அறக்கட்டளை சத்தியமங்கலம் சதீஷ் நிகழ்ச்சிக்கு உண்டான ஏற்பாடுகளை செய்து கொடுத்தார்.

தொடர்புடைய செய்தி