புகையிலை விற்றவர்களுக்கு அபராதம்

59பார்த்தது
புகையிலை விற்றவர்களுக்கு அபராதம்
ஈரோடு மாவட்டம் அந்தியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் அதிக அளவு விற்கப்படுவதாக மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர். தங்கவிக்னேஷ் M. D அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது தகவலின் அடிப்படையில் அந்தியூர் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் சதீஷ்குமார் மற்றும் அந்தியூர் போலீசாருடன் இணைந்து அந்தியூர் சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது இதில் ஐந்து கடைகளில் புகையிலைப் பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உடனடியாக கடைகள் அடைக்கப்பட்டது மேலும் கடை உரிமையாளர்களுக்கு தலா 25, 000 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி