அந்தியூரில் ஆணழகன் போட்டி

80பார்த்தது
அந்தியூரில் ஆணழகன் போட்டி
அந்தியூர் தவிட்டுப்பாளையத்தில் மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டி நடந்தது.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் தவிட்டுப்பாளையத்திலுள்ள தனியார் திருமண மண்டபத்தில், மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டி நடந்தது.
ஈரோடு மாவட்ட அமெச்சூர் பாடி பில்டிங் அசோசியேஷன் மற்றும் அந்தியூர் ஒன் மோர் பிட்னஸ் ஜிம் இணைந்து, ஈரோடு மாவட்ட சீனியர் ஆணழகன் போட்டி நடத்தினர்.
இதில், 50 கிலோ எடைப் பிரிலிருந்து 75 கிலோ எடைப் பிரிவு வரையிலான ஆணழகன் போட்டியும், ஆண்களின் உடலமைப்பு மற்றும் மாஸ்டர் பிரிவுக்கான போட்டிகளும் நடத்தப்பட்டன.
மாவட்ட அளவில் 35 உடற்பயிற்சி கூடங்களிலிருந்து, 120க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி