மைலம்பாடியில் ரூ. 68. 91 லட்சத்துக்கு எள் ஏலம்

51பார்த்தது
மைலம்பாடியில் ரூ. 68. 91 லட்சத்துக்கு எள் ஏலம்
பவானியை அடுத்த மைலம்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 68. 91 லட்சத்துக்கு எள் ஏலம் சனிக்கிழமை நடைபெற்றது.

இங்கு, 719 மூட்டைகள் எள் விற்பனைக்கு வந்தது. வெள்ளை ரகம் கிலோ ரூ. 90. 90 முதல் ரூ. 144 வரையும், கருப்பு ரகம் ரூ. 100. 09 முதல் ரூ. 144. 19 வரையும், சிவப்பு ரகம் ரூ. 96. 99 முதல் ரூ. 142. 00 வரையும் ஏலம் போனது. மொத்தம் 53, 571 கிலோ எள் ரூ. 68, 91, 094-க்கு விற்பனையானது.

மேலும், 1, 916 தேங்காய்கள் கிலோ ரூ. 7. 89 முதல் ரூ. 12. 36 வரையில் ரூ. 18, 468-க்கும், 14 மூட்டைகள் தேங்காய் பருப்பு கிலோ ரூ. 84. 9 முதல் ரூ. 68. 99 வரையில்
ரூ. 24, 934-க்கும் விற்பனையானது.

தொடர்புடைய செய்தி